Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் முன்னாள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளருக்கு பிணை

In இலங்கை
Updated: 07:29 GMT, Nov 28, 2016 | Published: 07:29 GMT, Nov 28, 2016 |
0 Comments
1571
This post was written by : Varshini

வாகன முறைகேடு தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவரும் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளைத் தளபதியுமான கே.எம்.எல்.சரத்சந்திர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (திங்கட்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு, மாதத்தின் ஒவ்வொரு இறுதி ஞாயிற்றுக்கிழமையிலும் பொலிஸ் விசேட விசாரணை பிரிவில் முன்னிலையாகவேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் விசேட அதிரடிப்படைக்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக கடந்த 23ஆம் திகதி பொலிஸ் விசேட விசாரணை பிரிவினரால் சரத் சந்திர கைதுசெய்யப்பட்டிருந்தார். வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 146,690 ரூபாய் நட்டமேற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg