Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பல இளம் வீரர்களை அணியில் கொண்டு வர ஜெஃப் மார்ஷ் உதவினார்: சந்திமால்

In கிாிக்கட்
Updated: 08:37 GMT, Nov 28, 2016 | Published: 08:37 GMT, Nov 28, 2016 |
0 Comments
1181
This post was written by : Anojkiyan

திரிமன்னே மற்றும் திமுத் கருணாரத்ன போன்ற பல இளம் வீரர்களை அணியில் கொண்டு வர முன்னாள் பயிற்சியாளர் ஜெஃப் மார்ஷ் உதவியதாக இலங்கை கிரிக்கெட் அணியின் உப தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜெஃப் மார்ஷ் செப்டெம்பர் 2011ஆம் ஆண்டு இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது பதவிக்காலம் 4 மாதங்கள் மட்டுமே நீடித்தது. தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இலங்கை அணி படுதோல்வியடைய அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் குறித்து சந்திமால் கூறுகையில், ஜெஃப் மார்ஷ் மிகச் சிறந்த பயிற்சியாளர். நாங்கள் தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பெற அவர் தான் உதவினார்.

அவர் எங்களுக்கு ஒரு தந்தை போன்றவர். திரிமன்னே, திமுத் கருணாரத்ன போன்ற பல இளம் வீரர்களை அணியில் கொண்டு வர அவர் தான் உதவினார். என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg