Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மச்சில் தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்: இந்திய இராணுவம்

In இந்தியா
Updated: 06:53 GMT, Nov 29, 2016 | Published: 05:22 GMT, Nov 29, 2016 |
0 Comments
1297
This post was written by : Sambavi

மச்சில் என்ற பகுதியில் இந்திய இராணுவ வீரரை பாகிஸ்தான் இராணுவத்தினரே கொன்றனர் என்றும் இதற்கான ஆதாரங்கள் தற்போது தம்மிடம் உள்ளதாகவும் இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த இந்திய இராணுவத்தினர், பாகிஸ்தான் இராணுவம் குறித்த பகுதியில் செயற்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி, ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில், எல்லையில் உள்ள மச்சில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில், 3 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களின் ஒரு வீரரின் தலையை, தாக்குதல்தாரிகள் துண்டித்த செயலும் அரங்கேறியிருந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு மற்றும் இராணுவத்தினர் பாகிஸ்தான் அரசிற்கு கண்டனம் தெரிவித்த போதிலும் பாகிஸ்தான் அரசாங்கம் இக்குற்றச்சாட்டை மறுத்திருந்தது.

இருப்பினும் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் காரணமாக ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடாத்தியது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தான் என்று இந்திய ராணுவம் உறுதி பட தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பவ இடத்தில், பாகிஸ்தான் பாதுகாப்பு படை, மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தது என பெயர் பொறிக்கப்பட்ட சாதனங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் மேலும், பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட, பாகிஸ்தான் இராணுவத்திற்குரிய கண்காணிப்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மச்சில் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் இராணுவமே என்று இந்திய இராணுவத் தரப்பு உறுதிப்பட தெரிவித்துள்ளது. எனினும், இது தொடர்பில் பாகிஸ்தான் தரப்பு எந்த பதில்களையும் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg