Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷரப்புக்கு பிடியாணை

In உலகம்
Updated: 05:44 GMT, Nov 29, 2016 | Published: 05:33 GMT, Nov 29, 2016 |
0 Comments
1328
This post was written by : Anojkiyan

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரப்புக்கு பலுசிஸ்தான் உயர் நீதிமன்றம், பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த ராணுவ நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தேசிய தலைவராக இருந்த நவாப் அக்தர் கான் புக்டி கொல்லப்பட்டார். இக் கொலைக்கு பாகிஸ்தானின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த முஷரப்புக்கு தொடர்பு இருப்பதாக, புக்டியின் மகன் நவாப்சதா ஜமில் புக்டி, வழக்கு பதிவு செய்தார்.

நீண்ட நாள் நடந்து வந்த குறித்த வழக்கின் விசாரணை நேற்று (திங்கட்கிழமை) விசாரித்த உயர் நீதிமன்றம், முஷரப்புக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் முஷரப் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அக்தர் ஷா, தனது கட்சிக்காரர் இந்த உயர் நீதிமன்றத்தை மதிப்பதாகவும், ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அவரால் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வரும் முஷரப்புக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகளை செய்ய வேண்டும் என அரசு நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg