Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம்களை புறக்கணிக்கும் வடமாகாண சபை: குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் மறுப்பு

In இலங்கை
Updated: 05:44 GMT, Dec 22, 2016 | Published: 05:44 GMT, Dec 22, 2016 |
0 Comments
1337
This post was written by : Risha

வடக்கு மாகாண சபையினால் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதற்கு எந்த நடவடிக்கையும் முதலமைச்சருடைய அமைச்சு எடுக்கவில்லை. முஸ்லிம் மக்களுக்கான காணிகளையும் வடக்கு மாகாண சபை வழங்கவில்லை என வடமாகாண உறுப்பினர் அஸ்மின் நேற்று முன்தினம் இடம்பெற்ற வடமாகாண சபை அமர்வின் போது குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

இதற்கு நேற்றைய (புதன்கிழமை) அமர்வில் பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த முதலமைச்சர், ‘வடக்கு மாகாண சபையினால் கடந்த மூண்டு வருடங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களுக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபை உருவாக்கப்பட்ட 2013ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட மூயாயிரம் முஸ்லிம் மக்களுக்கு வடக்கு மாகாண சபையால் காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தளவிலான பாரிய தொகை தமிழ், சிங்கள மக்களுக்கு கூட அதிகளவில் வழங்கவில்லை.

இவ்வாறிருக்க முஸ்லிம் மக்களை வடக்கு மாகாண சபை புறக்கணிக்கின்றது என்ற குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாததாகும்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg