Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

மெல்பேர்னில் கிறிஸ்மஸ் தினத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐவர் கைது!

In
Published: 06:14 GMT, Dec 23, 2016 |
0 Comments
1253

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் ஒன்றினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், அத்தாக்குதல் திட்டத்தினை தாம் முறியடித்துள்ளதாகவும் அந்நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விக்டோரியா தலைமை பொலிஸ் அதிகாரி கிரஹாம் ஆஸ்டன், தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதலான வெடிப் பொருட்கள் மற்றும் கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கொண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதலானது மெல்பேர்ன் நகரத்தின் முக்கிய பகுதிகள் பலவற்றில் மேற்கொள்ளப்பட இருந்ததாகவும், குறிப்பாக Flinders St Station, கூட்டமைப்பு சதுக்கம், மற்றும் St Paul’s Cathedral ஆகிய பகுதிகளில் தாக்குதல் மேற்கொள்ளப்பட இருந்ததாக கூறப்படுகின்றது.

எவ்வாறான போதும், தாக்குதல் தொடர்பில் முற்கூட்டியே கண்டறியப்பட்டு பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ் தலைமை அதிகாரி இனி பொதுமக்களுக்கு தாக்குதல் தொடர்பில் எதுவித அச்சமும் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.