Chrome Badge

என்னை நல்ல மனிதனாக்கிய மக்களுக்கு நன்றி: பிரியாவிடை உரையில் ஒபாமா

In
Published: 03:32 GMT, Jan 11, 2017 |
0 Comments
1113

தன்னை நேர்மையான நல்ல மனிதனாக செயற்பட வைத்த அமெரிக்க மக்கள் அனைவருக்கும் நன்றி கூற வேண்டிய தருணம் வந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவடைகின்ற நிலையில், புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆற்றிய பிரியாவிடை உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஒபாமா, ‘நான் சிறந்த ஜனாதிபதியாக போற்றப்படுவதில் மக்களுக்கு பெரும் பங்கு உண்டு. மக்களாகிய உங்களிடமிருந்து நான் பல விடயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். கடந்த எட்டு ஆண்டுகளாக நீங்கள் எனக்கு வழங்கிய ஊக்கமும், ஆதரவுமே என்னை நல்ல மனிதனாகவும், சிறந்த ஜனாதிபதியாகவும் ஆக்கியது.

நான் அதிபராக பதவியேற்றபோது இருந்ததை விட அமெரிக்கா தற்போது மேலும் வலுவான நாடாக மாறியுள்ளது. அனைவருக்கும் பொருளாதார வாய்ப்பு உள்ளது என்பதை உணராமல் நமது ஜனநாயகம் செயல்பட முடியாது.

கடந்த சில வாரங்களாக எனக்கும், மிஷலுக்கும் நலன் விரும்பிகளிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன. இந்த வாழ்த்துக்களை கண்டு நாம் நெகிழ்ச்சி அடைந்துள்ளோம்’ என்றார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)