Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

2017 ஆம் ஆண்டின் முதல் ஹட்ரிக் பெற்றது பிக் பஷ் லீக்

In
Updated: 11:16 GMT, Jan 12, 2017 | Published: 11:16 GMT, Jan 12, 2017 |
0 Comments
1055
50437530

2017 ஆம் ஆண்டு ஆரம்பமாகி வெறும் 12 நாட்களே கடந்துள்ள நிலையில், கிரிக்கெட் உலகின் 2017 ஆம் ஆண்டுக்கான முதல் ஹட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.

நடைபெற்று வந்த 2017 ஆம் ஆண்டின் பிக் பஷ் லீக் போட்டிகளின் பேர்த் ஸ்கோர்சர்ஸ் (Perth Scorchers) மற்றும் Brisbane Heat ஆகிய அணிகள் மோதின.

குறித்த போட்டியில் பேர்த் அணியின் அன்ரு தெய் என்ற பந்துவீச்சாளர் இறுதி ஓவரில் அசத்தலான பந்துவீச்சினை வழங்கி ஹட்ரிக் விக்கெட்களை கைப்பற்றினார். இதனால் எதிரணி தடுமாற்றத்தை அடைந்து தோல்வியைத் தழுவியது.

இதேவேளை, குறித்த போட்டியின் இறுதி ஓவர் வரை இரு அணிகளிற்கும் வெற்றி வாய்ப்பு சமமாகவே இருந்த போதிலும் இறுதி ஓவரின் பந்துவீச்சு எதிரணியை துவம்சம் செய்து விட பேர்த் அணி இலகுவாக தமது வெற்றி வாய்ப்பினை சுவீகரித்துக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.