Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ் இற்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல்களில் 03 துருக்கி படைவீரர்கள் உயிரிழப்பு

In ஐரோப்பா
Published: 06:18 GMT, Feb 10, 2017 |
0 Comments
1201
icon_com
This post was written by : Sylviya

சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கும் பொருட்டு ரஷ்யப் படைகளால் முன்னெடுக்கப்பட்ட விமான தாக்குதல்களில் எதிர்பாராத விதமாக 03 துருக்கி படைவீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 வீரர்கள் காயமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரஷ்ய இராணுவம், “சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா நடத்திய விமான தாக்குதல்களின் போது எதிர்பாராத விதமாக துருக்கி படைவீரர்கள் இருந்த கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் 03 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு இரங்கல் தெரிவித்தாகவும் துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் போதிய தொடர்பாடல் இல்லாமையே இந்த தவறு ஏற்படக் காரணம் என தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, வடக்கு சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நேற்று (வியாழக்கிழமை) துருக்கி நடத்திய விமான தாக்குதல்களில் 44 ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான குறித்த தாக்குதல்களின் போது துருக்கி படைவீரர்கள் சிலர் உயிரிழந்ததாகவும் இது தொடர்பில் செய்தி வெளியிட்ட துருக்கி ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg