Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா பதவியேற்பிற்காக நூற்றாண்டு விழா அரங்கத்தில் போடப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்

In இந்தியா
Updated: 10:24 GMT, Feb 10, 2017 | Published: 10:24 GMT, Feb 10, 2017 |
0 Comments
1500
icon_com
This post was written by : Shailu
Sasikala

சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா அரங்கத்தை சுற்றிலும் போடப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியமைக்க அ.தி.மு.க., சட்டமன்ற தலைவர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செவ்வம் ஆகியோர் ஆளுனர் வித்யாசகர் ராவை சந்தித்து உரிமை கோரிய நிலையில், ஆளுநர் இது தொடர்பில் வரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

எனவே ஆளுநரிடமிருந்து இதுவரையிலும் உறுதியான தகவல் ஏதும் வராததால், சென்னை பல்கலைகழக நூற்றாண்டு அரங்கத்தில் போடப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சசிகலா அ.தி.மு.க., சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, ஆளுனின் சென்னை வருகைக்கு பின்னர் உடனடியாக பதவியேற்கும் வகையில் சென்னை பல்கலை நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சசி பதவியேற்பதற்காக கடந்த 5ஆம் திகதி முதல் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
பின்னர் மெரினாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த செவ்வியின் பின் அரசியல் களம் தலைகீழாக மாறியது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg