Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்டில் இந்திய அணி புதிய சாதனை!

In கிாிக்கட்
Published: 06:32 GMT, Feb 11, 2017 |
0 Comments
2709
icon_com
This post was written by : Anojkiyan
India Bangladesh Cricket

ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸற்காக 687 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளது.

குறித்த ஓட்ட குவிப்பின் மூலம் தொடர்ச்சியாக மூன்று டெஸ்டில் 600 ஓட்டங்களுக்கு மேல் குவித்த ஒரே அணி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன் எந்தவொரு அணியும் இதுபோன்று தொடர்ச்சியாக மூன்று டெஸ்டில் 600 ஓட்டங்கள் குவித்தது கிடையாது.

இதற்கு முன் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த தொடரை 4-0 என இந்தியா கைப்பற்றியது. மும்பையில் நடைபெற்ற 4வது டெஸ்டில் விராட் கோஹ்லியின் இரட்டை சதத்தால் இந்தியா 631 ஓட்டங்கள் குவித்தது.

பின் சென்னையில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்டில் கருண் நாயரின் முச்சதத்தால் இந்தியா 759 ஓட்டங்கள் குவித்தது. தற்போது விராட் கோஹ்லியின் இரட்டை சதத்தால் இந்தியா 687 ஓட்டங்கள் குவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg