Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கில் 2 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு: ஐவர் கைது

In இலங்கை
Updated: 08:00 GMT, Feb 11, 2017 | Published: 07:59 GMT, Feb 11, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Risha
ganja mannar

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 2 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய கேரள கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேவேளை, சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேசத்திலிருந்து 120 கிலோகிராம் கேரள கஞ்சா வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

யாழ்ப்பாணத்தினூடாக பிற மாவட்டமொன்றுக்கு கேரள கஞ்சா கடத்தப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றிற்கு அமைவாக குறித்த கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி ஒரு கோடியே 20 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார்- தலைமன்னார் பிரதேசத்திலிருந்தும் சுமார் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 110 கிலோ கிராம் கேரள கஞ்சாப்பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தலைமன்னாரில் இருந்து தென்பதிக்கு கொண்டு செல்லும் வகையில் ஹயஸ் ரக வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பிலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg