Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு வீரர்கள் தடைகளை தாண்டி சாதிக்க வேண்டும்: இந்திய ஹொக்கி அணி தலைவர்

In விளையாட்டு
Updated: 05:16 GMT, Feb 12, 2017 | Published: 05:15 GMT, Feb 12, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Shailu
BASKARAN_4

விளையாட்டு வீரர்கள் தடைகளை தாண்டி சாதிக்க வேண்டும் என இந்திய ஹொக்கி அணியின் முன்னாள் தலைவர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் ‘விளையாட்டில் மறுமலர்ச்சி’ குறித்த சர்வதேச அளவிலான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் தலைவர், பாஸ்கரன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் உரையாற்றிய அவர், ‘நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் என்றாலும் விளையாட்டில் சாதனையாளர்கள் எண்ணிக்கை குறைவு தான்.

சிறந்த விளையாட்டு வீரர்களை நாம் அதிக அளவில் உருவாக்க முடியவில்லை. விளையாட்டில் குறை சொல்வதை விட அதற்கு நாம் தீர்வு காண வேண்டும்.

பல விளையாட்டுகளில் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது. வீரர்கள் தடைகளை தாண்டி சாதிக்க வேண்டும்.

தடகள வீரரான உசேன் போல்ட் எந்த வசதியும் இல்லாமல் பயிற்சி பெற்று சாதனை படைத்துள்ளார். எதிர்வருகிற 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கை விடுத்து, 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை குவிக்க நாம் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை தற்போதே மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதாரம், ராணுவம், விளையாட்டு ஆகிய 3 துறைகளும் முன்னேறினால் தான் ஒரு நாடு முன்னேற முடியும்.’ என்று அவர் தெரிவத்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg