Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு பொலிஸாரால் வாகனம் கையளிப்பு

In இலங்கை
Updated: 06:50 GMT, Feb 15, 2017 | Published: 06:48 GMT, Feb 15, 2017 |
0 Comments
1282
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
jeep (1)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய தொழில்நுட்ப துறை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் பொருட்டு பொலிஸாரால் ஜீப் வண்டியொன்று இன்று (புதன்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப துறையில் கற்கும் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு வாகனமின்றி சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் பாடசாலை அதிபர் மற்றும் பழைய மணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் இந்த ஜீப் வண்டி கையளிக்கப்பட்டது.

இந்த ஜீப் வண்டியின் தற்போதைய பெறுமதி சுமார் 6 இலட்சம் ரூபாவென பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை அதிபர் க.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார, வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி குமாரசிங்க, போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் பரிசோதகர் அனுரா சாந்த, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg