Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெண்டுல்கர்-ரிச்சர்ட்சின் கலவை தான் கோஹ்லி: கபில் தேவ் பாராட்டு

In கிாிக்கட்
Updated: 10:19 GMT, Feb 15, 2017 | Published: 10:19 GMT, Feb 15, 2017 |
0 Comments
1396
This post was written by : Anojkiyan

கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவியன் ரிச்சர்ட்சின் கலவை தான் விராட் கோஹ்லி என இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த டெஸ்டில், இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி இரட்டை சதம் அடித்தார்.

இதன் மூலம் 4 டெஸ்ட் தொடர்களிலும் தொடர்ச்சியாக 4 இரட்டை சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்நிலையில், இச்சாதனை குறித்து கபில் தேவ் கூறுகையில், நான் எப்போதுமே கண்டிராத வகையில் விராட் கோஹ்லி மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்கிறார்.

டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்சின் கலவை கோஹ்லி ஆவார். அவுஸ்ரேலியா அல்லது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் இதே அதிரடியை தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg