Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தின் நலனையும் உரிமையையும் பாதுகாக்க வேண்டும்: திருமாவளவன்

In இந்தியா
Updated: 15:21 GMT, Feb 17, 2017 | Published: 10:58 GMT, Feb 17, 2017 |
0 Comments
1193
icon_com
This post was written by : Surenth
thiruma- 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் நலனையும் உரிமையையும் பாதுகாக்க சுதந்திரமாக செயற்பட வேண்டுமெனவும் ‘பினாமி’ ஆட்சி அமைந்து விடக் கூடாது எனவும் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலித் பெண்கள் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது அதிகரித்துள்ளன எனவும் குறிப்பாக தலித் பெண்கள் அதிகளவு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

சிறுமியான ஹானிசி உட்பட இரண்டு பெண்கள் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் இதன் போது கோரிக்கை விடுத்தார்.

மேலும், அ.தி.மு.கவில் அதிகமாக தலித்துக்கள் உள்ளதாகவும் எனவே அவர்களுக்கு அதிகமான அமைச்சரவைகளை வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg