Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை சிறைக்கு சசிகலா மாற்றப்படுவாரா? – சலுகைகள் வழங்கப்படுமா?

In இந்தியா
Published: 05:53 GMT, Feb 20, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Surenth
sasikala (3)

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தன்னை சென்னை சிறைக்கு மாற்றக் கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடபில் அவர் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழக மற்றும் கர்நாடக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த வழக்கு தமிழகத்துடன் தொடர்பு இருப்பதால் இரண்டு மாநில சிறைத்துறை அதிகாரிகளும் பரஸ்பர முடிவு எடுத்தால் மாற்றம் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இரு மாநிலங்களும் அவரை மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டால் உச்ச நீதிமன்றம் தலையிடாது எனவும் யாராவது குறித்த விடயம் தொடர்பில் மேன் முறையீடு செய்தால் மாத்திரமே உச்ச நீதிமன்றம் தலையிடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

எது எப்படியோ சென்னை சிறைக்கு சசிகலா மாற்றப்பட்டால் தமிழகத்தை ஆட்சி செய்கின்ற அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருப்பதனால் அவருக்கு சலுகைகள் வழங்கப் படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg