Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய சரணாலயங்களைப் பார்வையிட மாணவர்களுக்கு இலவச அனுமதி

In இலங்கை
Published: 11:22 GMT, Feb 21, 2017 |
0 Comments
1085
icon_com
This post was written by : Ravivarman
Gamini jayawikrama - 044

நாட்டிலுள்ள வன ஜீவராசிகள் சரணாலயங்களை இலவசமாகப் பார்வையிடுவதற்கான அனுமதியினை பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் துறை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய வன ஜீவராசிகள் சரணாலயங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில், குமண வன ஜீவராசிகள் சரணலாய மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடுக்கப்பட்ட  கோரிக்கைக்கு அமைவாகவே அமைச்சர் மேற்படி உறுதியளித்தார்.

இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளன தலைவரும், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளருமான ஏ.எம். ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் 49 வருட அரசியல் பயணத்தினைக் கௌரவிக்கும் வகையில் நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

Gamini jayawikrama - 066 (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg