Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாகாண சபைகளுக்கு அதிஉச்ச அதிகாரம் வழங்குவது தொடர்பில் ஆராய்வு

In இலங்கை
Updated: 15:36 GMT, Feb 21, 2017 | Published: 15:31 GMT, Feb 21, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Surenth

மாகாணசபைகளுக்கு அதிஉச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவது சம்பந்தமாக அரசமைப்புச் சபையின் வழிநடத்தும் குழு ஆராய்ந்துள்ளது.

அரசமைப்புச் சபையின் வழிநடத்தும்குழுவின் கூட்டம் இன்று நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது. இதன்போது மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகவே அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும், இது விடயம் தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், வழிநடத்தும் குழுவின் அடுத்தக்கட்ட கூட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன்போது உறுதிப்படுத்தப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை வழிநடத்தும் குழுவிலுள்ள 21 உறுப்பினர்களுள் பெரும்பாலானவர்கள் அதிகாரப் பகிர்விற்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

புதியதொரு அரசமைப்பை உருவாக்கும் நோக்கில் அதன் பிரதான விடயங்களைக் கையாள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 21 பேரடங்கிய குழுவொன்று கடந்த 2016 ஏப்ரல் 5 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.

இந்தக்குழுவுக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதற்காக ஆறு உபகுழுக்களும் அமைக்கப்பட்டன. உபகுழுக்களின் அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg