Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதவியேற்பின் பின்னர் முதன்முறையாக பிரதமரை சந்தித்தார் எடப்பாடி

In இந்தியா
Updated: 05:53 GMT, Feb 25, 2017 | Published: 05:17 GMT, Feb 25, 2017 |
0 Comments
1208
icon_com
This post was written by : Risha
modi

எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரமாண்டமான சிவன் சிலை பிரதமர் நரேந்திர மோடியினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த திறப்பு விழா நிகழ்வை தொடர்ந்து இருவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநரும், முதலமைச்சரும் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg