Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்வரும் 12 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

In
Updated: 17:20 GMT, Feb 27, 2017 | Published: 12:16 GMT, Feb 27, 2017 |
0 Comments
1193
icon_com
This post was written by : Anojkiyan
snow

பிரித்தானியாவில் எதிர்வரும் 12 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.

வடபகுதியில் இருந்து வீசும் காற்று கடுமையான பனிப்பொழிவிற்கு வழிவகுக்கும் எனவும், வாகன சாரதிகள் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் ஆய்வு மையம் மேலும், தெரிவித்துள்ளது.

அத்துடன், செவ்வாய் காலை முதல் உறை பனிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தின் முக்கிய பகுதிகளில் ஏற்கனவே பனிப்பொழிவு ஆரம்பமாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

டோரிஸ் புயலின் தாக்கத்தில் இருந்து பிரித்தானிய மக்கள் முழுமையாக மீளாத நிலையில், வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள குறித்த எச்சரிக்கை மக்களை மேலும் அச்சமூட்டியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg