Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்கிறது

In இலங்கை
Updated: 09:45 GMT, Feb 28, 2017 | Published: 09:45 GMT, Feb 28, 2017 |
0 Comments
1274
This post was written by : Surenth

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுக்கும் போராட்டம் ஒன்பதாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

கடந்த 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இரவு பகலாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை பற்றிய உண்மையான நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஐ.நா.வில் இலங்கை அரசுக்கு இன்னுமொரு கால நீடிப்பு வழங்கக் கூடாதென்றும் இரகசிய முகாம்கள் தொடர்பில் அரசு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

எந்த ஒரு விசாரணையும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் இரவு பகலாக தொடர்கின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg