Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜோர்தானிய மற்றும் சவூதி அரேபிய மன்னர்கள் பேச்சுவார்த்தை

In உலகம்
Published: 07:09 GMT, Mar 28, 2017 |
0 Comments
1263
icon_com
This post was written by : Sylviya

ஜோர்தானிய மன்னர் அப்துல்லாவை சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்லஸீஸ் அல் – சௌட் (Salman bin Abdulaziz Al-Saud) நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தை நேற்று (திங்கட்கிழமை) ஜோர்தானின் தலைநகர் அம்மானில் (Amman) இடம்பெற்றுள்ளது.  இரு நாடுகளினதும் பிரதிநிதிகள், 15 உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றில் கைச்சாத்திட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக விவகாரங்கள், சுற்றுச்சூழல், ஊடகங்கள், கலாசாரம், ஆரோக்கியம் மற்றும் பெருந்தெருக்கள் அமைக்கும் திட்டம் என்பன தொடர்பிலேயே இவ் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக ஜோர்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரபு உச்சிமாநாடு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த இரு மன்னர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

குறித்த உச்சிமாநாட்டில், பலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய பிரச்சினை தொடர்பிலும் சிரியாவில் தொடரும் யுத்தம் தொடர்பிலும் அக்கறை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg