Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றின் ஆதரவை வரவேற்றார் நிக்கோலா

In
Published: 07:59 GMT, Mar 29, 2017 |
0 Comments
1254
icon_com
This post was written by : Sylviya

ஸ்கொட்லாந்தில் இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஸ்கொட்லாந்து  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளமையை முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் வரவேற்றுள்ளார்.

இரண்டாவது கருத்துக்கணிப்பு தொடர்பில் நேற்று (செவ்வாய்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த நிக்கோலா, “ஸ்கொட்லாந்து மக்களுக்கு உன்னத வாய்ப்பொன்றை வழங்குவதே இந்த இரண்டாவது கருத்துக்கணிப்பு. பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரதமர் தற்போது மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றார். இந்நிலையில் இரண்டாவது கருத்துக்கணிப்பு நடத்துவது சாத்தியமற்றது என்பதை நான் உணர்கின்றேன். இருப்பினும், பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றவுடன் இவ்விடயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றம் அக்கறை செலுத்தும் என நான் நம்புகின்றேன். இது தொடர்பில் எதிர்வரும் வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்”  என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெறுவது தொடர்பான குறித்த கருத்துக்கணிப்பு, எதிர்வரும் 2018ஆம் ஆண்டு அல்லது 2019ஆம் ஆண்டுக்குள் நடத்தப்பட வேண்டும் என நிக்கோலா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg