Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகரை முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவதாக தினகரன் வாக்குறுதி

In இந்தியா
Updated: 12:25 GMT, Mar 29, 2017 | Published: 12:23 GMT, Mar 29, 2017 |
0 Comments
1262
This post was written by : Elakkiya

ஆர்.கே.நகரை  முன்மாதிரியான தொகுதியாக மாற்றிக் காட்டுவதாக இடைத்தேர்தலில் அ.தி.மு.க. (அம்மா) கட்சி சார்பில் போட்டியிடும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

புதுவண்ணாரப்பேட்டை தேர்தல் பிரசாரத்தின்போதே தினகரன் மேற்படி தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘ ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டே ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பேற்றார். அரசியல் வரலாற்றில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மிகப்பெரிய பதிவு இருக்கின்றது. ஜெயலலிதா தொகுதி என்ற அந்தஸ்தை பெற்ற இந்த தொகுதியில், அவர் விட்டுச்சென்ற பணிகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்காக வேட்பாளராக நான் களமிறங்கியுள்ளேன்.

ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்றி காட்டுவேன். மக்கள் பணிகளுக்கு என்றும் முக்கியத்துவம் கொடுப்பேன். உங்கள் வீட்டு பிள்ளையாக உங்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து உழைப்பேன்.

அத்தியாவசிய தேவைகளை உடனடியாக செய்து தருவேன். உங்கள் நலன்சார்ந்த விடயங்களில் உங்களில் ஒருவனாக இருந்து நடவடிக்கை எடுப்பேன். எனவே எனக்கு தொப்பி சின்னத்தில் வாக்களித்து என்னை உங்கள் பிரதிநிதியாக நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg