Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூசிலாந்து அணியை வீழ்த்திய தென்னாபிரிக்கா தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்

In கிாிக்கட்
Published: 06:58 GMT, Mar 30, 2017 |
0 Comments
1442
icon_com
This post was written by : Anojkiyan
New Zealand v South Africa - 3rd Test: Day 3

நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணி தரவரிசையில், தென்னாபிரிக்க அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேபோல, இதற்கு முன்னதாக இரண்டாம் இடத்தில் இருந்த அவுஸ்ரேலிய அணி, இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம், ஒரு புள்ளியை இழந்து மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

தொடரை வெற்றிகொண்ட இந்திய அணி, ஒரு புள்ளியை கூடுதலாக பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.

இந்தியா 122 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும், தென்னாபிரிக்க 109 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், அவுஸ்ரேலியா 108 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்து 101 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், பாகிஸ்தான் 97 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg