Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் இணைகிறது கோச்சடையான் கூட்டணி

In சினிமா
Published: 10:02 GMT, Mar 31, 2017 |
0 Comments
1082
icon_com
This post was written by : Vithushagan
201703291652482029_Kochadaiyaan-duo-is-back_SECVPF

கோச்சடையான் படத்தில் இணைந்த இரண்டு பேர் மீண்டும் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய படம் ‘கோச்சடையான்’.  இப்படத்தில் நடிகர் ஆதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஆதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை ரிக்வேதா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்த மேலும் தகவல்கள் மற்றும் நடிகர், நடிகையர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘முடிஞ்சா இவன புடி’ படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்நிலையில், வெற்றி கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இப்படத்தை இயக்கவுள்ளார். விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg