Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன

In கிாிக்கட்
Published: 06:40 GMT, Apr 16, 2017 |
0 Comments
1259
icon_com
This post was written by : Surenth
Mumbai Indians vs Gujarat Lions

10ஆவது ஐ.பி.எல் தொடரின் 12 ஆவது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16ஆவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகின்றன.

இதன்படி, மாலை நான்கு மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றியை பதிவு செய்ய போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மும்பை அணி முதலாவது போட்டியில் புனே அணியிடம் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதையடுத்து, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர் ஆகிய அணிகளை வெற்றி கொண்டது.

இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள போட்டியில் குஜராத் அணியை தோற்கடித்து நான்காவது வெற்றியை பதிவு செய்ய மும்பை அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, குஜராத் அணி இரண்டு போட்டிகளில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகளிடம் தோல்வியை தழுவியுள்ளது. இதனையடுத்து, மூன்றாவது போட்டியில் புனே அணியிடம் இலகுவான வெற்றியை பெற்றுக் கொண்டது.

எனவே, குஜராத் அணியும் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்வதற்காக மும்பை அணியுடன் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg