Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐ.பி.எல். போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் சாதனை

In விளையாட்டு
Updated: 11:26 GMT, Apr 18, 2017 | Published: 09:05 GMT, Apr 18, 2017 |
0 Comments
1097
icon_com
This post was written by : Risha
buwa

ஐ.பி.எல். போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது வீரர் என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் புவனேஷ்வர் குமார் நிலைநாட்டியுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய (திங்கட்கிழமை) போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமே இந்த பெருமையை பெற்றுள்ளார்.

இதுவரை 81 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார், 297.5 ஓவர்கள் பந்துவீசி 2 ஆயிரத்து 78 ஓட்டங்களை கொடுத்து 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னர் ஐ.பி.எல். போட்டிகளில் மலிங்க 147 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 129 விக்கெட்டுகளையும், பிராவோ 122 விக்கெட்டுகளையும், பியூஸ் சாவ்லா 122 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 122 விக்கெட்டுகளையும், ஆசிஷ் நெஹ்ரா 103 விக்கெட்டுகளையும், வினய்குமார் 101 விக்கெட்டுகளையும், அஸ்வின் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள இந்த பட்டியலில் அடுத்தபடியாக புவனேஷ்வர் குமார் இணைந்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg