Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்புளுவென்ஸா நோயாளிகளுக்கான மருந்து தட்டுப்பாடு ஏற்படவில்லை: ஜெயசுந்தர பண்டார

In இலங்கை
Published: 12:42 GMT, Apr 18, 2017 |
0 Comments
1101
This post was written by : Surenth
H1N1

இன்புளுவென்ஸா தொற்றுக்குள்ளாகியுள்ள நோயாளிகளுக்கு வழங்கும் டெம்ப்ளு மருந்திற்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பற்றாக்குறை ஏற்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜெயசுந்தர பண்டார குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நோய் தொற்றை தடுப்பதற்கு சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

டெங்கு, வைரஸ் காய்ச்சல் மற்றும் இன்புளுவென்ஸா போன்ற நோய்களுக்கு வழங்கும் குறித்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டதாகவும் அது பொய்யான குற்றச்சாட்டு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டெம்ப்லு மருந்துகளை இன்புளுவென்ஸா நோயாளிகள் மாத்திரமே பாவிக்கப்படுவதாகவும், அவை டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு பாவிக்க முடியாது எனவும் ஜெயசுந்தர பண்டார குறித்த அறிக்கையில் தெரித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg