Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீதொடமுல்ல சம்பவம் குறித்து ஐ.நா. ஆணையாளர் விசாரணை நடத்த வேண்டும்: மஹிந்த அணி

In இலங்கை
Updated: 06:20 GMT, Apr 19, 2017 | Published: 06:19 GMT, Apr 19, 2017 |
0 Comments
1298
This post was written by : Varshini

கொலன்னாவ – மீதொடமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வினையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என மஹிந்த ஆதரவு பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மீதொடமுல்ல சம்பவத்தை இயற்கை இடராக கருத முடியாதென தெரிவித்துள்ள வாசுதேவ, அனைத்து அரசாங்கங்களும் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிலரின் சுயலாபம் மற்றும் அலட்சியப் போக்கின் காரணமாக இடம்பெற்ற இச் சம்பவம் மனித உரிமை மீறலாகும் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே போர்க்காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறி ஜெனீவா செல்வதைப் போன்று இவ்விடயத்தையும் ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என வாசுதேவ மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg