Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அன்னை பூபதியின் 29 நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது

In இலங்கை
Updated: 14:52 GMT, Apr 19, 2017 | Published: 14:49 GMT, Apr 19, 2017 |
0 Comments
1143
icon_com
This post was written by : Vithushagan
unnamed (11)

அகிம்சை போராட்டத்தின் மூலம் தமிழர்களின் போராட்டத்தை, முழு உலகையும் திரும்பிப் பார்க்கச் செய்த அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம்,  மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று(புதன்கிழமை) கல்லடியில் உள்ள அன்னை பூபதியின் கல்லறையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், எஸ்.சிறிநேசன், எஸ். வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்மற்றும் அன்னை பூபதியின் உறவினர்கள் உட்பட தமிழ் உணர்வாளர்கள் பலர்  கலந்து கொண்டு நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலரஞ்சலியும்,செலுத்தினர் இதனை தொடர்ந்து நினைவுரை பேருரைகள் இடம்பெற்றது.

தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கடந்த 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி, 31 நாட்கள் போராடி ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி உயிர்நீத்தார்.

unnamed (8) unnamed (10) unnamed (11)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg