Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தாஜூதீன் கொலை: முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Updated: 11:20 GMT, Apr 27, 2017 | Published: 10:55 GMT, Apr 27, 2017 |
0 Comments
1072
icon_com
This post was written by : Vithushagan
anura2

பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டிற்காக கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 4ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல, சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தாஜூதீன்  கொலை செய்யப்பட்ட தினத்தில், ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்ற வாகனங்கள் தொடர்பான குறிப்புகள் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் குறித்து தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று மன்றில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மாலபே தனியார் மருத்துவக்கல்லூரியில் இருந்து பரிசோதனைகளுக்காக பொரல்லை ஜின் டெக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உடல் எலும்பு பாகங்களை மீண்டும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg