Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் பன்னீர்செல்வம் தலைமையில் விரைவில் நல்லாட்சி மலரும்: செம்மலை

In இந்தியா
Updated: 11:34 GMT, Apr 28, 2017 | Published: 11:34 GMT, Apr 28, 2017 |
0 Comments
1230
This post was written by : Risha
semmalai

தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் விரைவில் ஊழலற்ற நல்லாட்சி மலரும் என முன்னாள் கல்வியமைச்சரும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் சட்டமன்ற உறுப்பினருமான செம்மலை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், எடப்பாடி அணியுடன் சேர வேண்டாம் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது. எனவே, அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவது சாத்தியமில்லை.

அதேவேளை, எமது தரப்பில் முன்வைக்கப்படும் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg