Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காணியின் உரிமையாளர் வந்து சந்திக்காதது ஏமாற்றத்தையே அளிக்கின்றது: பன்னங்கண்டி மக்கள்

In இலங்கை
Updated: 14:54 GMT, Apr 29, 2017 | Published: 10:13 GMT, Apr 29, 2017 |
0 Comments
1190
icon_com
This post was written by : Ravivarman

இதுவரையில் காணியின் உரிமையாளர் தம்மை வந்து சந்திக்காதது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக, காணிஉறுதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்கள் தமது ஆதங்கத்தினைத் தெரிவித்துள்ளனர்.

தமக்கான காணிஉறுதி மற்றும் வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு கோரி இன்று (சனிக்கிழமை) 39வது நாளாகவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அக்கிராமத்தைச் சேர்ந்தவர்களுள் ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“எமது போராட்டத்திற்கான முடிவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இறுதிவரையில் போராடுவதற்குத் தீர்மானித்துள்ளோம். காணியின் உரிமையாளர் வந்து சந்தித்தால்தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும். அரசியல்வாதிகளை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை. இவர்கள் வெறுமனே வாய் வாக்குறுதிகளை மட்டுமே தருகின்றார்கள்” என்று அவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg