Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இராணுவ விமானம் விபத்து: எட்டு பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 06:04 GMT, Apr 30, 2017 |
0 Comments
1236
icon_com
This post was written by : Sylviya

கியூபாவின் வடமேற்கு பிராந்தியமான ஆர்டெமிஸாவில் (Artemisa) இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் விமானத்திலிருந்த எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (சனிக்கிழமை) ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இராணுவ விமானம் ஹவானாவுக்கு அருகில் உள்ள பலாயா பரகோவா (Playa Baracoa) எனும் பகுதியில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 6.38க்கு புறப்பட்டதாகவும் பின்னர் Loma de la Pimienta  எனும் மலையின் மேல் மோதி விபத்துக்குள்ளானதாகவும் புரட்சிகர ஆயுதப்படை அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு என்ஜின்களைக் கொண்ட turboprop Antonov AN-26 என்ற குறித்த  விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg