Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா விலகும் போது சுமூகமான மாற்றம் ஏற்படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும்

In
Updated: 09:40 GMT, Apr 30, 2017 | Published: 09:40 GMT, Apr 30, 2017 |
0 Comments
1438
This post was written by : Sylviya

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் போது சுமூகமான மாற்றம் ஒன்று ஏற்படுவதை உறுதிசெய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe) பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிடம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மேயுடனான சந்திப்பின் பின்னர், நேற்று (சனிக்கிழமை) லண்டனில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்குறித்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பா என்பன வலுப்பெற வேண்டும் எனவும் அதுவே ஜப்பானுடைய விருப்பம் எனவும் அபே தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அபே, “ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகியமையின் பின்னர் உள்ள பிரித்தானிய பொருளாதாரத்தின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. பிரதமர் மேயுடன் உரையாடியதற்கு அமைய ஜப்பான் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் எவ்வாறு காணப்படும் மற்றும் கொண்டு செல்லப்படும் என்பது தொடர்பில் நாம் தொடந்தும் அக்கறை செலுத்துவோம்” என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg