Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பேன் : தமன்னா

In சினிமா
Updated: 12:35 GMT, May 3, 2017 | Published: 12:35 GMT, May 3, 2017 |
0 Comments
1272
This post was written by : Shailu

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தெரிவு செய்து நடிக்க விரும்புவதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

நடிகை தமன்னா சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், இதனை முன்னிட்டு ஐதராபாத் நகரில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், “சினிமாவுக்கு நடிக்க வருவேன் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில் சினிமா துறையில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறேன். இதுவரை பலதரப்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.எனவே இனி வரும் நாட்களில், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தெரிவு செய்ய விரும்புகிறேன்.

குறிப்பாக, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். பாகுபலி படத்தில் எனக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளேன்.

சினிமா ஒரு கனவு உலகம். அதனால்தான் இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg