Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு உடன் நடத்த வேண்டும்: விமல் வீரவன்ச

In இலங்கை
Updated: 14:52 GMT, May 3, 2017 | Published: 14:52 GMT, May 3, 2017 |
0 Comments
1232
This post was written by : Ravivarman

‘உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு உடன் நடத்த வேண்டும் என்பதே காலிமுகத்திடலில் பொது எதிரணியின் மே தினக் கூட்டத்தில் திரண்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது’ என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) பொது எதிரணி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொது எதிரணியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தொகையை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டங்களில் கலந்துகொண்ட மக்கள் தொகையுடன் ஒன்றிணைத்துப் பார்த்தால் அருகில்கூட அவர்களால் நெருங்க முடியாது.

அரசுக்கு நாங்கள் எச்சரிக்கை சமிக்ஞையை வெளியிட்டுள்ளோம். காலிமுகத்திடலில் திரண்ட மக்களின் பிரதான செய்தி அரசு உடனடியாக உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதேயாகும்” என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg