Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு மாகாண அமைச்சுக்களில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

In இலங்கை
Updated: 11:28 GMT, May 9, 2017 | Published: 10:17 GMT, May 9, 2017 |
0 Comments
1302
This post was written by : Ravivarman

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சு உட்பட ஏனைய அமைச்சுக்களில் காணப்படும் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப அனுமதி வழங்குமாறு ஜனாதிபதியைக் கோரியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்றையதினம் (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பல போராட்டங்களுக்குப் பின்னர், கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட 4784 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்கெனவே முகாமைத்துவத் திணைக்களம் அனுமதியளித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் கல்வியமைச்சு ஆகியவற்றில் காணப்படும், 2 ஆயிரத்து 765 அலுவலர்களுக்கான பதவி வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என முதலமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg