Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பியன்ஸ் கிண்ண தொடர்: 11பேர் கொண்ட அணியில் பேர்ஸ்டோவ் இடம்பெறுவது கடினம்

In கிாிக்கட்
Updated: 10:13 GMT, May 10, 2017 | Published: 08:56 GMT, May 10, 2017 |
0 Comments
2267
This post was written by : Anojkiyan

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ஜோனி பேர்ஸ்டோவ், 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவது கடினம் என அணியின் தலைவர் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தற்போதைய சூழ்நிலையில் அணியில் விளையாட இடம் கிடைக்கும் என்று பேர்ஸ்டோவ் எதிர்பார்க்க முடியாது. எங்கள் அணியில் வலுவான துடுப்பாட்ட வரிசை உள்ளது.

பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், ஜோஸ்பட்லர் ஆகியோர் அணிக்கு திரும்புவதால் பேர்ஸ்டோவ்க்கு இடம் அளிப்பது முடியாத காரியமாகும்” என கூறினார்.

விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரரருமான பேர்ஸ்டோவ் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர், இம்முறை இங்கிலாந்தில் ஜூன் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg