Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடியின் கீழ் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: இராதாகிருஷ்ணன்

In இந்தியா
Updated: 10:04 GMT, May 13, 2017 | Published: 10:04 GMT, May 13, 2017 |
0 Comments
1600
This post was written by : Surenth

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதை தான் உணர்வதாக மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இலங்கை விஜயம் குறித்து, புதுச்சேரியில் இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் ஒருவர், இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் வாழுகின்ற மலையக தமிழர் பகுதிக்கு விஜயம் செய்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் உள்ள மலையக தமிழ் மக்களுக்கு புதிதாக 10 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கையில் வாழுகின்ற எமது தமிழ் உறவுகள் குறித்து பிரதமர் கொண்டுள்ள அக்கறைக்கு தான் நன்றி தெரிவிக்க கடமை பட்டுள்ளதாகாவும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg