Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பருவப்பெயர்ச்சி மழையால் மீதொட்டமுல்லயில் மீண்டும் அனர்த்தம் ஏற்படும் அபாயம்

In இலங்கை
Updated: 05:51 GMT, May 14, 2017 | Published: 05:47 GMT, May 14, 2017 |
0 Comments
1296
This post was written by : Varshini

வெகு விரைவில் பருவப்பெயர்ச்சி மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், மீதொட்டமுல்ல குப்பைமேட்டு பகுதியில் பாரிய வெள்ளம் அல்லது மண்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மீதொட்டமுல்ல குப்பைமேட்டுக்கு எதிரான அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதியில் இன்னும் உரிய மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவில்லையென தெரிவித்துள்ள அவ் அமைப்பின் தலைவர் நுவான் போபகே, பிரதான கால்வாயானது குப்பைகளாலும் சேற்றினாலும் தடைப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வடிகால் அமைப்பும் மறுசீரமைக்கப்படாத நிலையில், பருவ மழை பெய்யுமிடத்து அப் பகுதியில் பாரிய வெள்ளப்பெருக்கு அல்லது மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரித்துள்ளார்.

குப்பைமேட்டை மாற்றியமைத்தல் தொடர்பில் அதிகாரிகள் கவனஞ்செலுத்துகின்றார்களே தவிர அனர்த்த பிரதேசத்தில் காணப்படும் மக்களை பாதுகாப்பான பகுதிகளில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த பகுதியில் மழை பெய்யுமிடத்து மீண்டுமொரு பாரிய மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆய்வு நிலையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg