Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ட்ரம்ப் இஸ்ரேல் விஜயம்

In
Updated: 04:22 GMT, May 22, 2017 | Published: 04:22 GMT, May 22, 2017 |
0 Comments
1749
This post was written by : Sylviya

மத்தியகிழக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சவூதி அரேபியாவுக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டதன் பின்னரே அவர் அங்கிருந்து இஸ்ரேலுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ட்ரம்பின் பாதுகாப்பு கருதி சுமார் 10,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் உள்ள சமாதான உடன்படிக்கை உன்னதமானதொன்று என வர்ணித்துள்ள ட்ரம்ப், அதன் வெளிப்பாடு எவ்வாறிருக்கும் என்பது தொடர்பில் தெளிவற்ற கருத்துக்களையே குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சமாதானம் உருவாகும் என்பது குறித்து தான் அதீத நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, சவூதி அரேபியாவுக்கான விஜயத்தின் போது அவர் முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் ஏனைய அரேபிய தலைவர்களிடம் தீவிரவாதத்தை முற்றாக அழிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg