Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். கிண்ணத்துடன் பூஜைகளில் ஈடுபட்ட மும்பை அணி உரிமையாளர்

In விளையாட்டு
Updated: 03:54 GMT, May 23, 2017 | Published: 03:51 GMT, May 23, 2017 |
0 Comments
1201
This post was written by : Risha
IPL

பத்தாவது ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் கிண்ணத்தை சுவீகரித்திருந்த நிலையில், நேற்று கிண்ணத்தை மும்பையிலுள்ள பிரசித்திபெற்ற சித்திவிநாயகர் ஆலயத்திற்கு எடுத்துச்சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள் ஆகியோர் பூஜை வழிபாடுகளில் கலந்துக் கொண்டிருந்தனர்.

ஹைதராபாத்தில் இடம்பெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதின.

அதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து 130 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய புனே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg