Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை தவிர்க்க முடியாது: சத்திய நாராயணா

In இந்தியா
Updated: 08:23 GMT, May 27, 2017 | Published: 08:23 GMT, May 27, 2017 |
0 Comments
1235
This post was written by : Surenth

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை தவிர்க்க முடியாது என்றும் அவர் தனது முடிவை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் வெளியிடுவார் என்றும் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது இரசிகர்களை சந்தித்து அரசியலில் ஈடுபடுவது குறித்து கலந்துரையாடி வருகின்றார். இது குறித்து அவரது சகோதரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிபிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது இரசிகர்களின் விருப்பம் என்றும் இதன் காரணமாகவே அவர், நண்பர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் தனது இரசிகர்களை இரண்டாம் கட்டமாக எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் சந்திப்பார் எனவும் அவரது இரசிகர்களே அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாகவும் சத்திய நாராயணா சுட்டிக்காட்டினார்.

ரஜினி அவரது முடிவை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார் என்றும் அவரது அரசியல் வருகையின் முக்கிய நோக்கமே, பொது வாழ்வில் உள்ள ஊழலையும், இலஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும் என்பதுதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg