Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரத்தினபுரி, நிவித்திகல கல்வி வலயப் பாடசாலைகளும் மூடப்படும்!

In இலங்கை
Updated: 04:41 GMT, May 28, 2017 | Published: 04:39 GMT, May 28, 2017 |
0 Comments
1341
This post was written by : Ravivarman
1.115

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரையில் மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக குறித்த கல்வி வலயப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையிலேயே மேற்படி விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் பெரும்பாலான பாடசாலைகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அனர்த்த நிலைகள் காணப்படும் இடங்களில் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் மாணவர் மற்றும் ஆசிரியர்களின் வரவுகள், இடப்பற்றாக்குறை, தொற்றுநோய்களின் தாக்கங்கள் குறித்த நடவடிக்கைகள் என்பவற்றினாலேயே பாடசாலைகள் மூடப்படுவதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg