Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஞ்செஸ்டர் தாக்குதல் தொடர்பான சி.சி.ரி.வி. காணொளிகள் அதிகாரிகள் வசம்!

In
Published: 05:31 GMT, May 28, 2017 |
0 Comments
1458
This post was written by : Anojkiyan

மஞ்செஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான சி.சி.ரி.வி. காணொளிகள் தற்போது உரிய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் இடம்பெற்ற தினம் இரவு பதிவான 14 கோணங்களிலான காட்சிகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மூல சாட்சியமாகக் கொண்டு அதிகாரிகள் தற்போது விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை மஞ்செஸ்டர் அரீனா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் குறைந்தது 64 பேர் காயமடைந்தனர். இந்த கொடூரத் தாக்குதலானது சல்மான் அபேடி என்பவரால் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது வரை இத்தாக்குலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட 13 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அவர்களில் இருவர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் தற்போது 11 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg