Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரற்ற காலநிலை: பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் அதிபர்கள் தீர்மானிக்க முடியும்

In இலங்கை
Updated: 16:33 GMT, May 28, 2017 | Published: 16:33 GMT, May 28, 2017 |
0 Comments
1266
This post was written by : Vithushagan

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகள் திறக்கப்படுவது மற்றும் மூடப்படுவது குறித்த முடிவுகளை அதிபர்களால் எடுக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அனர்த்தத்தினால் தமது பாடசாலைக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு தீர்மானங்களை முன்னெடுக்க அதிபர்கள் கோரப்பட்டுள்ளனர்.

இந்த தீர்மானத்தை மாகாண பாடசாலையாயின் வலய கல்விப் பணிப்பாளருக்கும், தேசிய பாடசாலையாயின் தேசிய பாடசாலைக் கல்விப் பணிப்பாளருக்கும் தெரியப்படுத்துமாறும் அதிபர்கள் கோரப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு  நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg