Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலநிலை அச்சுறுத்தல்: உலகநாடுகள் ஒன்றிணைய ஐ.நா வலியுறுத்தல்

In உலகம்
Updated: 03:53 GMT, May 31, 2017 | Published: 03:53 GMT, May 31, 2017 |
0 Comments
1511
This post was written by : Risha

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்த்து போராடுவதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டியது அத்தியாவசியமாகும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்தோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலநிலை மாற்றம் குறித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “உலகமே ஒரு குழப்பத்தில் காணப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உலக நாடுகள் மற்றும் சமூகங்கள் பல்வேறு அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றன.

நகரமயமாக்கல், உணவு பாதுகாப்பின்மை, தண்ணீர் பற்றாக்குறை, மக்கள் தொகை அதிகரிப்பு என நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் காலநிலை மாற்றம் முன்னிலை வகிக்கிறது.

காலநிலை மாற்றமென்பது நேரடி அச்சுறுத்தலாகக் காணப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளை உலக மக்கள் ஏற்கனவே உணர்ந்துள்ளனர். இந்த விளைவுகள் மிகுந்த ஆபத்தானவை. அது மாத்திரமின்றி அவை துரிதமாக அதிகரித்து வருகின்றன.

எனவே, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவதற்காக, பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஏற்படுத்தப்பட்ட பரிஸ் உடன்படிக்கையை அமுல்படுத்த அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg